பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ,”பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பான நெறிமுறைகள், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்று, கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று,பள்ளி கல்வி துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், நடந்தது.
ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு முறைகளுடன், மதிப்பெண் பட்டியல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சரியான முறையை முடிவு செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும் என்று இதில், பங்கேற்ற பள்ளி கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.